admin

பெங்களூரு மதவன்முறை – UTJ வின் கண்டன அறிக்கை.

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலியாக சித்தரித்து மதவன்முறையை தூண்டி அப்பாவி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.இதற்கு காரணமான கயவர்களையும் மற்றும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.மேலும் இவர்களின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வெளியீடுயுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டது

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் திருச்சி மாவட்டம் பீமநகர் தெற்குயாதவதெருவில் (09/08/2020) அன்று சிறுவனின் காலில் கான்கிரீட் சிமென்ட் கல் விழுந்து கால் விரல் கிழிந்த நிலையில் உடனடியாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் களத்தில் இறங்கி மிக விரைவாக மருத்துவமனையில் அச்சிறுவனை அனுமதித்து மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ் நிர்வாகம்திருச்சி மாவட்டம்யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – மாபெரும் இணையவழி கட்டுரைப் போட்டி.

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – மாபெரும் இணையவழி கட்டுரைப் போட்டி தலைப்பு – 1- பாபர் மசூதி யாருடையது? 2 – சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு