பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் சமுதாய பணி அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் 80 வயது மதிக்கதக்க வயதுடைய முதியவர் தன்னுடைய மகனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வழிமாறி பீமநகர் தெற்குயாதவ தெருவில் தடுமாற்றமாக நின்ற நிலையில் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அந்த முதியவரை தலைமை அலுவலகத்தில் வைத்து அவருக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பராமரித்து பின்பு அருகில் பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு துரிதமாக காவல் ஆய்வாளர் திரு ஆரோக்யதாஸ் அவர்கள் விசாரித்து பின்பு அந்த முதியவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுகாவேரி என்ற ஊர் தெரியவந்ததும் பாலக்கரை காவல் நிலையத்திலிருந்து நடுகாவேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு முதியவரின் குடும்பத்தார்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குடும்பத்தினர் நேரடியாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (21/11/2020) காலையில் வருகைதந்தார்கள் அவர்களிடம் UTJ நிர்வாகிகள் ஒப்படைத்தார்கள் அந்த குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்து முதியவரை மூன்று நாள் குடும்பத்தாரில் ஒருவராக அரவணைத்ததற்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்..! மேலும் இந்த மனிதநேய பணிக்கு உதவிய காவல்துறைக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்!
நிர்வாகம்
திருச்சிமாவட்டம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்