UTJ தலைமை அறிக்கை 16/11/2020 திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு UTJ கடும் கண்டனம்! வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மத ரீதியான மோதல்கள் இல்லாமல் உறவுகள் போல் இணக்கமாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் மேலும் இந்த அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க சில காவிபயங்கரவாதிகள் சதி செயல் செய்து வரும் நிலையில் அதே போல தற்போது முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை இழிவுபடுத்தும் வேலையில் சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.எந்த ஒரு மத கடவுள்களையோ அல்லது பண்டிகைகளையோ இஸ்லாம் புண்படுத்துவதில்லை சமீபத்தில் தொப்புள் கொடி உறவுகளான இந்து சமுதாய மக்கள் தீபாவளி என்கிற பண்டிகையை பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள் அப்படி பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழல் மாசு ,நோயாளிகளுக்கு நோவினை,பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு என்றெல்லாம் இருந்தாலும் கூட இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் முழு மதிப்பளிக்கின்றோம் ஆக இப்படி இணக்கமாக வாழக்கூடிய முஸ்லிம்களை சீண்டும் விதமாக தீபாவளி பண்டிகை அன்று வெடித்த பட்டாசுகளில் முஸ்லிம்களாகிய நாங்கள் உயிருக்கு மேலாக நேசிப்பதில் ஒன்று புனித நூலான திருக்குர்ஆன் ஆகும் அப்படிப்பட்ட அந்த நூலின் பிரதிகளை வெடி தயாரிப்பில் பயன்படுத்தி வெடித்தது முஸ்லிம்களாகிய எங்களது உள்ளத்தில் அழியா பெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது இதை எந்த முஸ்லிமும் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.*தமிழக முதல்வர் எடப்பாடியார் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதில் ஈடுப்பட்ட அந்த பட்டாசு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து மற்றும் அதன் உரிமையாளர்மீது கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட கைது நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதனை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரலாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பீமநகர் S.ரபீக்
மாநில தலைவர்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்