பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
மாநில சுற்றறிக்கை 10/2020
நாட்டில் தொடர்ந்து சிறும்பான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களையும் மற்றும் சட்டங்களையும் இயற்றி வரும் ஆளும் பாஜக, தற்போது தமிழகத்தில் தொல் திருமாவளவனை எதிர்த்து போராட்டத்தை நடத்தி இதன் மூலமாக சிறும்பான்மை மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் வகையில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களை பற்றியும் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பரிப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி நாட்டில் உள்ள முஸ்லிகளைசீண்டி மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறும்பான்மை மக்களுக்கு வழங்கும் உரிமையை விமர்சித்து தொடர்ந்து பாஜக வைச் சேர்ந்த எச் ராஜாவும் மற்றும் நிர்வாகிகளும் பேசி வருகின்றனர் மேலும் குறிப்பாக சொல்வதாக என்றால் எச் ராஜா இதே போல் மதவன்முறையை தூண்டும் விதமாக பேசிவருகிறார், இப்படி புனித திருக்குர்ஆனைப்பற்றி அறிவீனமாக பேசிவரும் எச் ராஜாவை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பீமநகர் S.ரபீக்
மாநில தலைவர்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்