தமிழக அரசுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,மாநில தலைவர் #பீமநகர் ரபீக் வெளியிடும் அறிக்கை..
கடந்த காலங்களில் தமிழக அரசு காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா, அண்ணா பிறந்த தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு இதற்கு முன் கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர்… கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது மேலும் அண்ணாவின் கொள்கையை இயக்கமாக கொண்டு செயல்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் முதல்வரான திரு எடப்பாடி K.பழனிச்சாமி அரசுக்கு முஸ்லிம்களின் சார்பாக கோரிக்கையாக தெரிவிப்பது என்னவென்றால்…
இதுவரை நடைபெற்ற முன்விடுதலைகளில் குறிப்பிட்ட பிரிவினரை அதாவது முஸ்லிம் சமுதாய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் பாகுபாடு தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றது… இதற்கு மத மோதல் வழக்கு (communal cases) வழக்கு என்ற காரணத்தைக் காட்டி பல இசுலாமிய சிறைவாசிகள் இருபதாண்டுகளை கழித்தும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர் இது சம்ந்தமாக பல இசுலாமிய இயக்கங்கள் நீண்ட கால கோரிக்கையாகவும் மற்றும் போராட்டங்களில் மூலமாகவும் அரசுக்கு தெரிவித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது..
எனவே எதிர்வருகின்ற அண்ணா பிறந்தநாள் அன்று நன்னடத்தையின் அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் அனைத்து முஸ்லிம்கள் சார்பாகவும் வலியுறுத்தி கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பீமநகர் ரபீக்
மாநிலதலைவர்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்.