பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர்
சமூக தொண்டுப் பணியுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அல்லாஹ்வுடைய கிருபையினால் சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் ஆதரவற்ற முதிய பெண் தன்னுடைய நிலத்தில் குடிசை போடக்கூட இயலாத நிலையில் மழையிலும், வெயிலும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அந்த ஊருக்கு வியாபாரம் செய்து வந்த ஒரு சகோதரர் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததன் அடிப்படையில் உடனடியாக தலைமை நிர்வாகிகள் தொடர்புக்கொண்டு உண்மை நிலையை அறிந்து பொருளாதாரம் சம்மந்தமாக ஒரு சகோதரரிடம் பெறப்பட்டு நேரடியாக சென்று அவர்களுக்கு சிறிய வீடு முழுவதும் கட்டி முடிந்த நிலையில் இன்று(20/12/2020) மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் ,மாநில செயலாளர் அப்பாஸ், திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சாதிக் அவர்களும் கல்லக்குறிச்சி சையதுபாய் அவர்களும் இந்த அன்பளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அந்த ஆதரவற்ற முதிய பெண்ணிடம் வீடு மற்றும் மின்சாதன வீட்டு உபயோகப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்இதற்கு பொருளாதாரம் உதவி செய்த சகோதருக்கு அதிகமதிகம் துஆ செய்யவும் மேலும் இது போன்ற ஏராளமான பணிகளுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
திருக்குர்ஆன் 57:18
நிர்வாகம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்