Month: August 2020

பசித்தோருக்கு உணவளிக்கும் திட்ட பணி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்ட பணி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,திருச்சிமாவட்டம் சார்பாக அரசு மருத்துவமணை வளாகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் மற்றும் காவேரி ஆற்று பாலத்தில் இருக்கக்கூடிய வழிபோக்கர்களுக்கும் இரவு உணவு சுமார் 1000 (ஆயிரம்) நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! மேலும் இப்பணிக்கு பொருளாதாரம் வழங்கியவர்களுக்கு படைத்த இறைவனிடத்தில் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும். நிர்வாகம்திருச்சிமாவட்டம்யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதல் ஜந்து இடம்.

முதல் பரிசு : யாஸ்மீன் காதர் பாஷா இரண்டாம் இடம் : நூர் நிஷா மூன்றாம் இடம் : காமிலா சேக் நான்காம் இடம் : ஹுஜ்ஜுள்ளாஹ் ஜந்தாம் இடம் : ஹுசைன்

பெங்களூரு மதவன்முறை – UTJ வின் கண்டன அறிக்கை.

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலியாக சித்தரித்து மதவன்முறையை தூண்டி அப்பாவி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.இதற்கு காரணமான கயவர்களையும் மற்றும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.மேலும் இவர்களின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வெளியீடுயுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்